English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
அன்பியம்

அன்பியம்

"அன்பியம்" என்பது Basic Christian Communities (BCCs) குறிக்கிறது. BCC 1960 கள் மற்றும் 1970 களில், முக்கியமாக லத்தீன் (தென்) அமெரிக்க கண்ட நாடுகளிலும் , இத்தாலியிலும், கத்தோலிக்க குழுக்களிடையே தொடங்கப்பட்டது . இது வத்திக்கான் இரண்டாம் கவுன்சில் (1965) அங்கீகரிக்கப்பட்டது.

எங்கள் பங்கில் மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படியால் அன்பியம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. எங்கள் பங்கில் சுமார் 25 அன்பியங்கள் உள்ளன, மேலும் ஒவ்வொரு அன்பியமும் ஒரு தலைவரால் வழிநடத்தப்படுகிறது.

ஈடுபடுவோம்

குடும்பங்களின் ஒருங்கிணைப்பே அன்பியங்கள் தான். குடும்பங்களின் ஈடுபாடுதான் அன்பியங்களின் செயல்பாடு. அன்பியங்களின் உயிர்நாடி குடும்பங்கள்தான்.குடும்பங்களைக் கிறிஸ்தவக் குடும்பங்களாக உருவாக்கும் தளங்களில் முக்கியமானது அன்பியம். எனவே, அன்பியங்களில் பங்கெடுப்போம். அன்பியக் கூட்டங்களில் பங்கெடுப்பது கடமையாகக் கொள்வோம்.

  • ஒரு அன்பியத்தில் குடும்பங்கள் 15க்குக் குறையாமல் 30க்கும் மேற்படாமல் இருக்க வேண்டும்
  • அன்பியங்களின் எல்லைகள் பங்கு அருள்பணிப் பேரவையின் உதவியுடன் பங்கு அருள்பணியாளரால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
  • அன்பியக் கூட்டங்களில் அருள்பணியாளரின் அல்லது அருள்சகோதரிகளின் உடனிருப்பு செய்யப்பட வேண்டும்.
  • அன்பியத் தலைவர்கள் எல்லாக் குடும்பங்களுக்கும் கூட்டத் தகவலை முன்பாகவே கொடுத்து அனைவரின் வருகையையும் உறுதிச் செய்தல் வேண்டும். அன்பியமாக எடுக்கப்படுகின்ற முயற்சிகள் பங்கின் வளர்ச்சிக்கானதாக பங்குத் தந்தையிடம் முன் அறிவிப்புச் செய்ததாக இருக்க வேண்டும்
  • குறைந்தது மாதம் ஒருமுறை அன்பியக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் பங்கின் எல்லைக்குள் வீடு மாற்றம் செய்வோர் பங்கு
  • அருள்பணியாளரிடம் அறிவித்துப் புதிய அன்பியத்தில் தங்களின் குடும்பத்தைப் பதிவு மாற்றம் செய்துக் கொள்ள வேண்டும்
  • மனித சமூகங்களைக் கட்டயெழுப்புவதே அன்பியங்களின் நிறைவும் உச்சக்கட்ட நோக்கமுமாகும் எனவே அன்பியம் மூலம் உடன்வாழ் அனைத்துத் தரப்பினரோடும் நல்லுறவை வளர்த்து, நற்செய்தி விழுமியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
  • பிரச்சனைகளை மட்டுமே பேசும் தளமாகவோ, அல்லது வெறும் செபக்கூட்டமாகவோ அன்பியத்தை சுருக்கிவிடக் கூடாது
  • அன்பிய நிர்வாகிகளின் பணிக்காலம் 3 ஆண்டுகளாகும்.