



மரியாயின் சேனை
#மரியாயின் சேனை நிறுவனர் பிராங்க் டஃப்
அயர்லாந்து நாட்டின் பிராங்க் டஃப் 1921 செப்டம்பர் 7ம் நாள் கத்தோலிக்க பெண்கள் மற்றும் அருட் தநதை மைக்கேல் தோஹர் ஆகியோருடன் சேர்ந்து முதல் பிரசீடியத்தை தோற்றுவித்தார். அன்று முதல் இன்று வரை உலகின் அனைத்து நாடுகளிலும் மரியாயின் சேனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
#மரியாயின் சேனை : கிருஷ்ணகிரி பங்கு:
சுமார் 58 ஆண்டுகளுக்கு முன் அருட்தந்தை குழந்தைசாமி அவர்களால் கிருஷ்ணகிரி பங்கில் தோற்றுவிக்கப்பட்டது. திரு. வி.டி.எஸ் அந்தோணி அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த தற்போது கிருஷ்ணகிரி பங்கில் 7 பிரசீடியங்களும் 2 சிறுவர் பிரசீடியங்களும். ஒரு கியூரியாவும் இயங்கி வருகின்றது
#கியூரியா (உள்ளூர் கிளை):
06.10.1996 யின் புனித பாத்திமா கியூரியா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கியூரியாவின் உறுப்பினர்கள் 32 நபர்கள் (Praesidia), மற்றும் வளர்ச்சி பணியாளர்கள் 2 நபர்கள். கூட்டமானது மாதம் தோறும் முதல் செவ்வாய் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை நடைப்பெறுகிறது.கூட்டத்திற்கு சராசரியாக 15 பேர் முதல் 20 பேர் கலந்து கொள்கின்றனர். 7 பிரசீடியங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
##நல்லாலோசனை மாதா பிரசீடியம்:
13 பெண்கள் உறுப்பினராக கொண்ட இப்பிரசீடியம் புனித பாத்திமா அன்னை ஆலய வளாகத்தில் புதன் மாலை 5 மணி அளவில் கூடுகிறது.
##மாதரசி மாதா பிரசீடியம்:
12 பெண்களை உறுப்பினர்களாக கொண்ட இப் பிரசீடியம் புனித பாத்திமா அன்னை ஆலய வளாகத்தில் சனி மாலை 5 மணி அளவில் கூடுகிறது.
##விண்ணரசி மாதா பிரசீடியம்:
ஞாயிறு காலை 9.30 மணி அளவில் புனித பாத்திமா அன்னை ஆலய வளாகத்தில் கூடும் இப்பிரசீடியத்தின் உறுப்பினர்கள் 4 ஆண்கள்.
##பாத்திமா மாதா பிரசீடியம்:
இரு பாலரும் இணைந்து செயல்படும் இப்பிரசீடியம் பாத்திமா துவக்கப்பள்ளியில் வெள்ளி மாலை 4.15 மணி அளவில் கூடுகிறது. உறுப்பினர்கள் 19 பேர்.
##அமலோற்பவ மாதா பிரசீடியம் :
இரு பாலரும் இணைந்து செயல்படும் இப்பிரசீடியம் வெள்ளி காலை 9.00 மணி அளவில் கூடுகிறது. 23 உறுப்பினர்களை கொண்டது.
##தமதிரித்துவ மாதா பிரசீடியம்
32 பெணகளை உறுப்பினராக கொண்ட இப்பிரசீடியம் புனித அன்னாள் மேல் நிலைப் பள்ளியில் செவ்வாய் மாலை 4.30 மணியளவில் கூடுகிறது.
##வரப்பிரசாத மாதா பிரசீடியம்:
17 பெண்களை உறுப்பினராக கொண்ட இப்பிரசீடியம் புனித அன்னாள் துவக்கப் பள்ளியில் புதன் மாலையில் 4.30 மணியளவில் கூடுகிறது.
##வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சிறுவர் பிரசீடியம் (சிறுமிகள்):
புனித அன்னாள் மேல் நிலைப் பள்ளியில் புதன் மாலை 3.30 க்கு கூடும் இந்த பிரசீடியம் 8 உறுப்பினர்களை கொண்டது.
#சேனையின் பணிகள்:
- திருப்பலிக்கு தயாரித்தல்,
- ஞாயிறு மறைக்கல்வி நடத்துதல்,
- மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவுதல்,
- வீடுகளை சந்தித்தல்,
- நோயாளிகளை சந்தித்து ஜெபித்தல்,
- சிறைச்சாலை கைதிகளை சந்தித்தல்,
- ஏழை மாணவர்களை படிக்க வைத்தல்,
- குடும்ப ஜெபமாலையை ஊக்குவித்தல்,
- முதியோர் இல்லம் சென்று சந்தித்தல் .
போன்ற பல சீரிய பணிகளை சிறப்பாக செய்து இறைமக்களையும் அருட்தந்தையர்களையும் பெற்ற சேனையாக உள்ளது.
கியூரியா உறுப்பினர்கள், இருவர் தர்மபுரியில் நடைபெறும் கொடிசிய கூட்டத்தில் மாதம்தோறும் பங்கெடுத்து வருகின்றனர். தற்போதைய கியூரியா தலைவர் திருவாளர். மரிய சூசை அவர்கள், உபதலைவர் திரு. சேவியர், செயலர். திருமதி. பவுலின்மேரி, பொருளாளர். திருமதி. மரியலூயிசா, ஆகியோரை கொண்டு பங்குத் தந்தை அருட்தி இசையாஸ் அவர்கள் சேனையை திறம்பட வழி நடத்துகிறார்.