
FSM சபை (கல்வித்துறை)
அண்ணல் அசிசியின் அடிசுவற்றிலே நடைபயின்று அன்னை மரியா வழித்தோற்றல்களாய் 1931-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி மரியன்னை பிரான்சிஸ்கன் ஊழியர் சபை (FSM) ஆறு வெண்ணிற புறாக்கள் இந்திய மண்ணில் அதுவும் தமிழக கடைக்கோடியில் உள்ள சோழமண்டலத்தில் விளங்கிய கிருஷ்ணகிரி மண்ணில் காலடி பதித்தனர்.
அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் அவர்கள் தங்குவதற்கு ஒரு வீட்டையும் காலி நிலத்தையும் தந்து கல்விப் பணிகளை மற்றும் மருத்துவ பணிகளை ஆற்றிட அழைப்பு விடுத்தார்.
அவர்களின் அழைப்பினை சிரமேற்கொண்டு மதர் மரிய பிரான்சிஸ் அவர்கள் வீரியமிக்க விதைகளை கிருஷ்ணகிரி மண்ணில் விழுந்து, வீடு வீடாய் சென்று குழந்தைகளுக்கு கல்வி கற்க பெற்றோர்களை வருந்தி கேட்டு அழைப்பு விடுத்தனர்.
அன்று தொடங்கி அவர்களின் கல்விப் பணி இன்றளவும் அன்பும் சேவையும் என்று விருதுவாக்குடன் தொடர்கின்றன..
ஆலபோல் தழைத்து
அருகும்போல் வேரூன்றி
மூங்கில் போல் சூழ்ந்து
வாழையடி வாழையாக
-தங்கள் பணிகளை தொடர்ந்து 88 ஆண்டுகளாக சிறிது தொய்வின்றி சிறப்பாக செய்து ஏழை எளிய மக்கள் வாழ்வை ஒளியேற்றும் தீபங்களை சுடர்விட்டு வருகின்றனர்.
1980-1982 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்கள் மாணவி செயற்கையா அதிகமானதால் பள்ளியின் பணிபுரியும் அருள் சகோதரிகளை கொண்டு தனியாக கன்னியர் இல்லமும் மருத்துவப் பணிபுரியும் கண்ணியர்களுக்கு கொண்ட தனி இல்லமும் கட்டப்பட்டது.
அருள்கன்னியர்களின் அன்பு பரிவு கருணையால் 1937 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொடங்க பள்ளி துவங்கி இருபாலர் கல்வி முறையில் செயல்பட்டு வந்து RC தொடக்கப்பள்ளி என்று கிருஷ்ணகிரி மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட இப்பள்ளி பிறகு மெல்ல மெல்ல மாணவர்கள் வருகை பெருக. பின்னர் 1954 ஆம் ஆண்டு நடுநிலை பள்ளியாகவும், 1978 ஆம் ஆண்டு பள்ளியின் பெயர் மாற்றம் பெற்று புனித அன்னாள் மகளிர் உயர்நிலைப்பள்ளி பள்ளியாக உயர்ந்து. மேலும் 1997 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக மிளிர்ந்தது.
1967 ஆம் ஆண்டு புனித அன்னாள் மழலையர் மற்றும் ஆங்கிலத் தொடக்கப் பள்ளியும் துவங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அகர்வால் மக்களின் நெடுநாள் கனவாக இருந்த St. Ann's Public CBSC School, ஜிஞ்சுப்பள்ளி 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை Sr. அமலி, மாதர் சுப்பீரியர். பொறுப்பேற்று தொடர்ந்து பல நற்பணிகள் தன் உடன் இருக்கும் 17 அருள் சகோதரிகளுடன் இணைந்து...
- மூன்று முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள்,பெண்கள் வளமான வாழ்விற்கு வடிகாலாய் நின்று வழிகாட்டி வருகின்றனர்.
- பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கண்டறிந்த அவர்களுக்கு உதவுதல்.
- இப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளித்தல்.
- மரியாவின் ஊழியர்கள் (FSM) lay associate மூலமாக மக்கள் சமூகப் பணியில் ஆன்மீகப் பணிகளும் ஆர்வமுடன் ஈடுபடுத்த.
- சிறைவாசிகளை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு மட்டுமில்லாமல் அவர் குடும்பத்திற்கும் பொருளாதார உதவி அளித்தல்.
- இப்பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று மக்களின் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உதவி செய்தல்.
- பங்கின் ஆன்மீக வளர்ச்சி முழு ஈடுபாட்டுடன் செய்தல்.
- பாடகர் குழுவில் பங்கேற்றல்.
- மறைக்கல்வி வகுப்புகள் நடத்துதல்.
- திருப்பலிக்கு பீட அலங்காரம் செய்தல்.
- கிளை பங்கில் மறைக்கல்வி வகுப்புகள் நடத்துதல்.
போன்ற நற்பணிகள் அன்போடும் இறை உணர்வோடும் இன்றளவும் செய்து இறை இயேசுவின் அன்பு சீடர்களாய் வாழ்ந்து.
அன்னை மரியவெர்ஜினியின் அடிசுவிடில்
நாளும் வளர்ந்து
புனித பாத்திமா அன்னையின் பாதுகாவலியும்
புனித பிரான்சிஸ் அசிசியாரின் ஆசிரோடும் தொடர்ந்து செயலாற்றி வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
Source: [Franciscan Missionaries of Mary – St. Clare’s Convent, Bangalore](https://fsmsisters.org.in/bangalore/st-clares-convent/)