
ஊடகப்பணி குழு
2019 இவ்வாண்டை யாராலும் மறக்க முடியாது. ஒரு சிறிய கண்ணுக்குத் தெரியாத கிருமி இந்த உலகத்தையே தன் கைக்குள் அடக்கியது. எங்குப் பார்த்தாலும் மரண ஓலங்கள், மனிதர் நடமாட்டமே இல்லாத நெடுஞ்சாலைகள், இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்த காலம் அது.
பள்ளிகள் மூடங்கின,
அலுவலகங்கள் ஓய்ந்தன,
ஆலயங்கள் களையிழந்தன.
இந்த நேரத்திலே இறைவனைப் பற்றிய தேடல் மிக அவசியம் என்பதை உணர்ந்த அப்போதைய பங்குத் தந்தை அருட்பணி SusaiRaj அவர்களால் முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 'YouTube' channel தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சிறிய சிறிய தொகுப்பு வீடியோக்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றப்பட்டது. குருத்து ஞாயிறு, பாஸ்கா திருப்பலி போன்றவற்றை பதிவு செய்து பதிவேற்றப்பட்டது.
பிறகு 2020 ஆம் ஆண்டு புதிய பங்குத் தந்தையாக Fr. இசையாஸ் அவர்கள் பொறுப்பேற்றார். 'YouTube' channel ஐ மேலும் வலுப்படுத்த இளைஞர்களுக்குத் தேவையான அத்தனை ஆலோசனைகளையும் வழங்கி, வழிகாட்டியாக நின்று Facebook, Twitter (X), Instagram, Moj, ShareChat, WhatsApp போன்ற வலைத்தளங்களில் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக குழு அமைத்து Photo's, Video's அனைத்தும் சரியான முறையில் உருவாக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால் ஆரம்பகாலத்தில் தோல்விகளையே சந்தித்தோம். எங்களுடைய Mobile மூலமாக பதிவேற்றம் செய்ததால், Mobile இழந்தோம். ஆனால் எடுத்த பணியில் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் உறுதியோடு இருந்தோம். எங்களுக்கு பக்க பலமாக எங்களைச் சுற்றி நல்ல உள்ளங்கள் இருந்ததால் சரியான முறையில் ஒளிபரப்பு செய்ய அதற்குத் தேவையான அத்தனை கருவிகளையும் வாங்கித் தந்து ஊக்குவித்தனர். (அவர்களை நன்றியோடு நினைக்கின்றோம்.)
ஊடகப்பணி தொடங்க முக்கிய காரணமாக இருந்ததே கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து திருப்பலியை மக்கள் காணவேண்டும் என்பதே இதன் முக்கிய கருப்பொருளாக இருந்தது. இதன் அடிப்படையில் ஞாயிறு இரண்டாம் திருப்பலியைத் தொடர்ந்து நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தோம். அது மட்டுமில்லாமல் தவக்கால பாடல்கள், மாதாபாடல்கள், கிறிஸ்துமஸ் பாடல்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து Editing செய்து சரியான முறையில் பதிவேற்றம் செய்தோம்.
- முதற்கட்டமாக சரியாக பார்வையாளர்களை சென்றடையவில்லை.
- நாங்கள் செல்லச் செல்ல பார்வையாளர்களைக் குவியச் செய்து...
- எம் பங்கு நிகழ்வினை பதிவேற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல், அருகில் இருக்கும் ஆலயங்களுக்கும் ஊடகப்பணி தொடங்கப்பட்டது. தருமபுரி, கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திக்குப்பம், சுண்டம்பட்டி, புஷ்பகிரி போன்ற பல இடங்களில் இருந்து வந்த அழைப்பின் அடிப்படையில் பதிவேற்றம் செய்ததில் பார்வையாளர்களை உயர்த்தி சென்று “நற்செய்தியை அறிவிக்காவிடில் உனக்கு ஐயோ கேடு” என்பதை உணர்ந்தவர்களாய் எங்கள் ஊடகத்தின் வழியாக இப்பணியை மேற்கொண்டிருக்கிறோம். இதுவை கரம் பிடித்த எம் இறைவனுக்கும், வழி நடத்தி வரும் எம் பங்கின் நாயகி பாத்திமா அன்னைக்கும், எங்களின் கோடான கோடி நன்றிகள்.
மேலும், பாத்திமா அன்னை திருத்தலத்தின் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை முழுமையாக வடிவமைத்து, பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பினையும் எங்கள் ஊடகப்பணி குழுவே அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறது.