
புனித பவுல் இளையோர் இயக்கம்
இளமைப் பருவம் இது வாழ்வின் வசந்தகாலம். எனவே நம் திருத்தந்தை 2 - ம் ஜான்பால் இளையோரை "திருச்சபையின் வசந்த காலம்" என்கிறார். இளையோர்....!
"நாளைய நம்பிக்கை விண்மீன்கள் "மட்டில்லா இன்றைய எதார்த்தங்களும் இவர்களே! "கல்லுக்குள் மறைந்திருப்பது சிலை! மரத்துக்குள் மறைந்திருப்பது சிற்பம்! உனக்குள் மறைந்திருப்பது ஆற்றல் அதை நீ தேடு. பவுல் இளையோர் குழு. நண்பா தேடு ." என்றத் தேடலில் துவங்கியது தான் புனித
இவர்களின் ஈடு இணையற்ற "சுப்ரீம் மாடலானார் " 33 வயது சாதனை இளைஞர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இளைஞர்கள் செதுக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்ததால், உருவானதே இந்த இளைஞர் குழு.
2006 ஆம் ஆண்டில், வார இறுதி நாட்களில் விளையாடுவதற்காக, ஒன்றுக் கூடிய இளைஞர்களின், சீரிய சிந்தனையில், எழுந்தது ஒரு வினா ? இறையாட்சிப் பணியில் நம் பங்கு என்ன? பங்கு என்னும் குட்டித் திருஅவையில், அதன் வளர்ச்சியில் எவ்வாறு நாம் உதவ முடியும்? என்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம் திரு. ஸ்டேன்லி ஆரோக்கியராஜ், திரு. அந்துவான். திரு. பிரடரிக் ஆகிய மூவரின் தலைமையில் குழு அமைந்தது. நட்புகள் ஒன்றாக இணைந்தனர். 2008 -ல் மறைமாவட்ட அளவில் குழுவை பதிவு செய்ய முற்பட்டனர்.
2008 -ம் ஆண்டு புனித பவுல் ஆண்டு கொண்டாடப்பட்டது. அன்றைய உதவிப் பங்குத் தந்தை அருட்பணி. மரியப்பன் அவர்களின் வழிகாட்டுதல்படி "புனித பவுல் இளையோர் குழு " எனப் பெயரிடப்பட்டு, அன்று முதல் இன்று வரை ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும், பங்கு பணிகளில் பங்காற்றி வருகின்றனர்.
இறையாட்சியின் மதிப்பீடுகளில் வாழவும். நம்பிக்கை வாழ்வை, உற்சாகமூட்டி, ஊக்கப்படுத்தவும், சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் ஈடுபடுத்தவும், சமூகத்தில் மதிப்பு மிக்க, மனித நேயமிக்க, மனிதர்களாக உயரவும்,
வழிகாட்டி, இளைஞர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சேர்த்த, அருட்பணி. சிரில் அடிகளாரை
நினைத்து நன்றி கூறுகிறோம்.
#இளையோர் வாழ்வும் பணியும் :
தொலைநோக்குப் பார்வையும், தொண்டு மனப்பான்மையும், இரத்தத்தானம் செய்யும் மனித நேய பண்புகளோடு, மரம் நடுதல் போன்ற சமூக பணியையும் மேற்கொள்கிறார்கள்.
மறைந்த அருட்பணியாளர். அந்தோணிமுத்து தவச்செல்வன் அவர்களின், வழிகாட்டுதலின் படி, ஆலயப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டனர். புது புது சிந்தனைகளில், மெருகூட்டும் கலைநயத்தில், ஆலய அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், அன்னையின் தேரினை அலங்கரித்தல், என மிகச்சிறப்பாக, செயல்பட்டு வருகின்றனர்.
மறைபரப்பு ஞாயிறு சிறப்பிப்பதில் இவர்கள் பாணி ஒரு தனி பாணி. ஊடகப் பணியின் மூலம் கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தலத்தை அகிலம் அறியச் செய்துள்ளனர்.
பங்கு பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக திரு. ஜார்ஜ், திரு. பிரடரிக் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
#இது வரை தலைவர்களாக
2008-2010 : கிறிஸ்டி
2010-2011 ஆரோக்கியராஜ்
2011-2018 : பிரடரிக்
2018 முதல் : ஜார்ஜ்
2020-ம் ஆண்டிலிருந்து பங்குதந்தை அருட்பணியாளர். இசையாஸ் அவர்களின் அற்புதமான வழிகாட்டலில், மேலான ஆதரவுடன், சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, ஆலய புனரமைப்பு பணிக்காக மொய் விருந்து நடத்துதல், விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவற்றின் மூலம் நிதி திரட்டி ஆலய பணியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களின் பணி பாராட்டக்கூடியதாக உள்ளது.
அலைபோல ஓயாதுழைக்கும்.
ஆற்றல் உள்ள இவர்கள்,
மலைபோல் மாண்பினை வளர்ப்பர்!
மானுட மகத்துவம் காண்பர்!
புதிய வரலாறு படைத்திடவே,
புத்துணர்வு கொண்ட இளையோர்
உதயமாகும் வரலாற்றில்,
உன்னதமாய் இவர்களும், இடம்பெறுவர் என்பது திண்ணம் !