
மாதா இருதய சபை
#கிருஷ்ணகிரி மண்ணில் மாதா இருதய சபை வரவும் வளர்ச்சியும்
புதுவை தூய இதய மரியன்னையின் சபையுடைய 75 ஆம் ஆண்டு ஜூப்லி ஆண்டில் 1975 இல் கிருஷ்ணகிரி மண்ணில் அடியெடுத்து வைத்தனர். இச்சபை இம்மண்ணுக்கு வந்து பணிசெய்ய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்தவர் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி ஐசக் அடிகளார் ஆவார் சேலம் மறைமாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் இருந்த போது மேதகு ஆயர் பேரருள் மைக்கேல் போஸ்கோ அவர்களின் ஆதரவோடும். |அழைப்புக்கு செவிமடுக்கும் உள்ளத்தோடும் இம்மண்ணில் பணியைத் தொடங்கினர். கிருஷ்ணகிரி மாதா இருதய சபை அருட்சகோதரிகள்.
தொடக்க காலத்தில் பங்கில் உள்ள ஆர்.சி. பாத்திமா பள்ளியில் பணியாற்ற அருள் சகோதரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி மூன்று பேர் பள்ளியில் பணியாற்றினர். கிருஷண்கிரியில் இடம் இல்லாத காரணத்தால் தொடக்க காலத்தில் எலத்தகிரி இல்லத்தில் இருந்து வந்து பணி செய்தனர் சகோதரிகள். இச்சூழலில் ஆயர் மைக்கேல் போஸ்கோ அவர்கள் கொடுத்த இலவச நிலத்தில் இல்லம் கட்டி எழுப்புவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக சகோதரிகள் இல்லம் 1975 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
#பங்களிப்பும் பணிகளும்
1981 ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த இல்லத்தில் தங்கி வெளியில் சென்று படிப்பதற்காக விடுதி ஒன்று நிறுவப்பட்டது. பிற்காலத்தில் தடைபட்ட அந்த விடுதி, 2013 ஆம் ஆண்டு முதல் அலுவலகம் சென்று பணி செய்கின்ற பெண்களுக்கான விடுதியை முறையான அரசு அனுமதியோடு நடத்தி வருகின்றனர் அருட்சகோதரிகள்.
பள்ளியில் பணிசெய்து கொண்டே பங்கில் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மறைக்கல்வி எடுப்பதும், அருள்சாதனங்கள் பெறக்கூடியகுழந்தைகளை முறையாக தயார் செய்வதும், பாடற்குழுவில் பங்கெடுப்பதும் என பல அடிப்படை பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர் அருள் சகோதரிகள், கிறிஸ்துமஸ் மற்றும் தவக்காலம் போன்ற சிறப்புக் காலங்களில் சுற்றி உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதும், அவர்களின் மாண்பை உயர்த்துவதற்கான சில முயற்சிகளை எடுப்பதும் என பல மனித நேயப் பணிகளையும் செய்து வருகின்றனர். கடந்த 47 ஆண்டுகளாக மாதா இருதய சபையினர் பங்கு மக்களுக்கும் பங்கிற்கும், மறைமாவட்டத்திற்கும், திருச்சபைக்கும் மனித நேயத்துடன் பல பணிகள் செய்து வருகின்றனர்.
#இறுதியாக
மாதா இருதய சபை கிருஷ்ணகிரி மண்ணில் பணி செய்ய வேண்டும் என்று தந்தை ஐசக் அவர்கள் தொடங்கிய முயற்சியின் விளைவாக ஆசிரியப்பணி, சிறைப்பணி, அன்பியப்பணி, ஆன்மீகப்பணி என பல பணிகளை செய்து மக்கள் ஆன்மீகத்தில் வளர உதவி செய்து வருகின்றது மாதா இருதய சபை.