English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
தருமபுரி மறைமாவட்டம் • குடும்பநலப் பணிக்குழு

திருமண தயாரிப்பு வகுப்பு (2026–2027)

வகுப்பு நடைபெறும் நாட்கள் & நேரம்

நடைபெறும் முறை: இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு

2026 ஜூலை 11 & 12
2026 செப்டம்பர் 12 & 13
2026 நவம்பர் 14 & 15
2027 ஜனவரி 9 & 10
2027 மார்ச் 13 & 14
2027 மே 8 & 9
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம்: மேய்ப்புப்பணி நிலையம், புதிய பேராலய வளாகம், தருமபுரி
முக்கிய குறிப்புகள்
  • பெற்றோர் வருகை: இரண்டாம் நாள் வகுப்பிற்கு பெற்றோருடன் வரவேண்டும்.
  • பதிவுக் கட்டணம்: ரூ. 1,000/-
  • பங்குத்தந்தை கடிதம்: பங்குத்தந்தையின் கடிதம் பெற்று வரவேண்டும்.
  • தகுதி: திருமணத்திற்கு தயார் நிலையில் இருப்பவர்கள் மட்டும் வருவது சிறப்புடையதாகும்.
  • சான்றிதழ்: திருமண ஓலை எழுதுவதற்கு முன்பே திருமண தயாரிப்பு வகுப்பில் பங்குபெற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும்.
திருமணம்

திருமணம்

ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணைத்து, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை அன்பு செய்யவும், தம் பிள்ளைகளைக் கிறிஸ்தவ நெறியில் வளர்க்கவும், இல்லத் திருஅவையை உருவாக்கவும் இறையருளை அளிக்கிற அருளடையாளமே திருமணம் ஆகும்

ஆண் 21 வயதும் - பெண் 18 வயதும் நிறைவடைந்தவுடன், திருமண தயாரிப்பில் பங்கு பெற்றல் வேண்டும். முதலில் பெண் வீட்டிலும் பின்னர் ஆண் வீட்டிலிலும் திருமண ஓலை எழுதப்பட்ட பின்னர் மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் அது வாசிக்கப்பட்டு, திருமண அனுமதி பெற்றல் வேண்டும். நல்ல பாவ அறிக்கை செய்தும், இருசாட்சிகள் முன்னிலையில், திருப்பலியில், நல்ல மனநிலையில் முழுமன ஒப்புதல் கொடுத்தும், திருஉணவு பெற்றும் திருமண பதிவேட்டில் கையொப்பமிட்டும், வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க உறுதி செய்தல் வேண்டும்.

தயாரிப்போம்

  • அடிப்படைத் தகுதிகளை உறுதிப்படுத்துதல்.
  • பங்கு உரிமைச் சான்று / குடும்பக் கையேடு.
  • திருமுழுக்குச் சான்று.
  • முதல் திருவிருந்து சான்று / உறுதிப்பூசுதல் சான்று.
  • வயதுச் சான்று .

#திருமணத் தயாரிப்பு வகுப்புகளில் பங்கெடுப்பு

குறிப்பிட்ட நாட்களில் பங்கேற்கப் பங்குத் தந்தையிடம் முன்கூட்டியே கடிதம் பெறல்.

பங்கெடுத்தபின் சான்றிதழை பங்குத் தந்தையிடம் காட்டுதல்.

பெற்றோர்களும் குறிப்பிட்ட நாள்களில் மணஉறவு பயிற்சியில் பங்கெடுத்தல்.

#பங்குத் தந்தை வழங்கும் தயாரிப்புக்கு ஒத்துழைத்தல்

  • திருமண அருளடையாளம் மற்றும் குடும்ப வாழ்வு தொடர்பான பாடங்களைப் படித்தல்.
  • குறிப்பிட்ட நாளில் பங்குத் தந்தையைச் சந்தித்து, வினாக்களுக்குப்.
  • பதிலும், தெளிவான விளக்கமும் பெறுதல்.
  • திருமணத் தயாரிப்பு படிவத்தைச் சுயமாக நிரப்புதல்.
  • வெளியூர் - மணமகன் மணமகளாக இருப்பின், திருமண அறிவிப்புக்குரிய கடிதம் பெற்றுச் செல்லுதல் .
  • திருமண நாள், நேரம், இடம் பற்றிய குறிப்புகளைமுறையாக பங்குத்தந்தையிடம் கொடுக்கவும்.
  • இது தொடர்பான கட்டணங்களை முறையாகச் செலுத்துதல் (திருமணத் தயாரிப்புக் கட்டணம், திருமணத் திருப்பலி கட்டணம்).
  • திருமணத் திருப்பலிக்குத் தகுந்த தயாரிப்புகள் செய்து கொள்ளவேண்டும்.