English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
திருமுழுக்கு

திருமுழுக்கு

நம் பாவங்களைப் போக்கி, தூய ஆவியாரால் நிரப்பி நம்மைக் கடவுளுடைய பிள்ளைகளாகவும் திரு அவையின் உறுப்பினர்களாகவும் மாற்றுகின்ற அருள் அடையாளம் திருமுழுக்கு ஆகும்

குழந்தைகளுக்கு 2ஆம் மற்றும் 4ஆம் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமுழுக்கு கொடுக்கப்படும். பெற்றோர், ஞானப் பெற்றோர் பாவ அறிக்கை செய்து, திருமுழுக்கு கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும். குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் மற்றும் ஞானப் பெற்றோரின் பெயர்கள் ஆகியவற்றை திருமுழுக்கு அருள்ளடையாளத் தாளில் குறிப்பிட்டுத் திருமுழுக்கின்போது கொண்டுவர வேண்டும். அவசர வேளையில் யாரேனும் திருமுழுக்கு கொடுத்திருந்தால் பங்குத் தந்தையிடம் தெரிவிக்க வேண்டும்.

#தயாரிப்போம்

  • பங்கில் நமக்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல்.
  • பெற்றோர்களின் கிறிஸ்தவத் தகுதிகளை உறுதிப்படுத்துதல்
  • அன்பிய ஈடுபாட்டினை உறுதிப்படுத்துதல்.
  • பங்குக்குச் செலுத்த வேண்டிய நிதியைச் செலுத்துதல்.
  • பெற்றோர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துதல்.
  • ஞானப்பெற்றோருக்குரிய தகுதிகளை உறுதிப்படுத்துதல்.
  • பெற்றோருக்குத் திருச்சடங்கின் பகுதிகளை விளக்குதல்.
  • பெற்றோர்கள் அடிப்படை மறைக்கல்வியைப் பெறுதல்.
  • அன்றைய திருப்பலியில் அனைவரும் முழுமையாக பங்கெடுத்தல் .