
உறுதிப்பூசுதல்
தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பி திருஅவையின் பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட நமக்கு ஆற்றலைத் தருகிற அருளடையாளமே உறுதிப்பூசுதல் ஆகும்
8ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படிக்கும் மாணவ மாணவியர் மட்டுமே உறுதிப்பூசுதல் பெறலாம். ஆனால் உறுதிப்பூசுதல் தயாரிப்பு வகுப்புகளை முடித்தபிறகு பங்கில் உறுதிப்பூசுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும்
முதல் நற்கருணை பெற்ற மாணவ-மாணவியர் அனைவரும் 12ம் வகுப்பு முடிக்கும் முன் உறுதிப்பூசுதல் பெற்றிருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
#தயாரிப்போம்
- உறுதிப்பூசுதல் பெறுவோரின் வயது, பக்குவம் போன்ற தகுதியை ஆய்வு செய்வோம்.
- முக்கியமாகத் தயாரிப்பு வகுப்புகளில் பங்கெடுப்போம்.
- தகுதிக்குரிய சான்றை உறுதிப்படுத்துவோம்.
- ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கெடுப்போம்.
- நற்கருணை வழிபாட்டில் தொடர்ந்து பங்கெடுப்போம்..