English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
திருவழிபாட்டு குழு

திருவழிபாட்டு குழு

"திருப்பலியின் அங்கமே திருவழிப்பாடு " நம் பங்கில் நடைப்பெறும் ஒவ்வொரு வழிப்பாட்டு நிகழ்வுகளுமே, இக்குழுவில் உள்ள நபர்கள் எடுக்கும் தீர்மானத்தையே மையமாக கொண்டு செயல்படுத்தப்படும்.

மாதத்தில் முதல் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு தேர் பவனியும், ஒவ்வொரு சனிக்கிழமைகளில் நடைபெறும் தேர்பவனியிலும் திருவிழாநாட்கள், ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள். நற்கருணை ஆராதனை இவை போன்ற நிகழ்வுகளை பட்டியலிட்டு அந்த நிகழ்வுகளை எவ்வாறு செயல்படுத்தலாம். அந்த வழிபாட்டினை யார் வழி நடத்துவது, எம் முறையில் அதனை நடத்திச் செல்வது மற்றும் இடவசதி, இருக்கை வசதி ஆகியவைகளை எவ்வாறு அமைத்து தருவது என்பதனை ஆலோசனை செய்து செயல்படவைப்பர் இந்த குழுவினர்.

இக்குழுவிலுள்ள நபர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5:00 மணி வரை கோவில் வளாகத்தில் கூடி சில முடிவுகள் எடுத்து அதனை நோட்டீசில் அச்சிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது திருப்பலி முடிந்த பின் அதனை இறை மக்களுக்கு கொடுத்து, அவர்களை பக்தியின் பாதையில் நடத்திச் செல்வது இக்குழுவில் உள்ள உறுப்பினர்களே.

அன்பியங்கள் வழியாக இறைமக்களை சந்தித்து, வழிபாட்டு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்களை திருப்பலிகளில் வாசிக்கப்படும் வாசகங்கள், மன்றாட்டுக்கள் பாடல்கள் ஆகியவற்றை அன்பியங்கள் மூலமாக பிரித்துக் கொடுத்து திருவழிப்பாட்டு நிகழ்வை சிறப்பாக செய்ய தூண்டுவதும் இவ் வழிபாட்டு குழுவில் உள்ள உறுப்பினர்களே!..

# இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள்:

*பங்குத்தந்தை*: அருள் திரு. ச. இசையாஸ்

*உதவிப் பங்குத்தந்தை*: அருள் திரு . பெனடிக்ட் அருள் திரு. ஜார்ஜ்

*அருட்சகோதரிகள்:* FSM, FIHM

*வேதியர்:* திரு. தாமஸ்.

*இசைக்குழு தலைவர்:* திரு .ராஜா

*செப களஞ்சிய குழு தலைவர்:* திரு. அஸ்கினாஸ்

*பங்கு பேரவை துணைத் தலைவர்:* திரு அந்துவான்.

*செயலர்:* திருமதி. பவுலின் மேரி (ஆசிரியை)