English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
பங்கு மக்கள்

பங்கு மக்கள்

#நற்செய்தி வழியில் வளர்வோம்

நற்செய்தி பணியாளர்கள்கிறிஸ்துவின் மனநிலை கொண்டவர்களாக சமுதாயத்தில் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்து, வாழ்வில் ஒழுக்கமுடைவர்களாக இருக்க வேண்டும்.

பங்கு அருள்பணியாளர்களோடும் பங்கு மக்களோடும் இணைந்து செயல்படுபவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சிப் பெற்ற நற்செய்திப் பணியாளர்கள் தங்கள் சொந்தப் பங்கு வாழ்வில் முழுமையாக ஈடுபட்டு, அன்பியங்களில் திருப்பலியில் மற்றும் கற்பிக்கப்படும் மறைக்கல்விப் பணியில் உதவ வேண்டும்.

#இறைவார்த்தையால் புதுப்பித்துக் கொள்வோம்

ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கும் கிறிஸ்துவின் பிரசன்னமாக விளங்குகின்றது விவிலியம். நமது குடும்ப வாழ்விற்கு ஒளிவிளக்காக, வழிகாட்டியாக, நண்பனாக எப்போதும் விளங்குவது இறைவார்த்தை எனவே விவிலியம் என்னும் புனித நூலுக்கு தகுந்த மரியாதை வழங்குவது மட்டுமல்ல, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தனித்தனியாகவும். குடும்பமாகவும் வாசித்து தியானிக்க வேண்டும்

  • ஆலய ஆராதனை வழிபாடுகளுக்கும் அன்பியக் கூட்டங்களுக்கும் திருவிவிலியம் எடுத்து வருவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
  • குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் திருவிவிலியம் இருப்பதை உறுதிசெய்து அனைத்து இல்லங்களிலும் திருவிவிலியம் நிறுவப்படுவதை அன்பிய நிகழ்வாகக் கொண்டாடி, குடும்பத்திலுள்ள அனைவரும் தினசரி தொடர் விவிலிய வாசிப்பு மேற்கொள்ளவேண்டும்.
  • பங்கில் விவிலிய வங்கி ஏற்படுத்திப் பராமரிக்கப்படுவதையும் சுப நிகழ்வுகளில் விவிலியத்தை அன்பளிப்பாக அளிப்பதையும் ஆதரிக்க வேண்டும்.
  • விடுமுறை விவிலியப் பள்ளி (VBS) சிறுவர்களுக்கு விவிலிய ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைய திட்டமிடுதல் வேண்டும்.
  • பிள்ளைகள் அருள் அடையாளங்கள் பெறுவதற்கும் பங்கின, மறைமாவட்டத்தின் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு ஞாயிறு மறைக்கல்வி வருகையை வலியுறுத்தலாம்.

#செபிக்கின்ற குடும்பமாகத் திகழ்வோம்

ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பத்திலும் திரு இருதயப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கென்று தனி இடம் ஒதுக்கப்படுகின்றது. அதற்குரிய மரியாதையும் தவறாது வழங்கப்படுகின்றது. ஆனால் அப்படம் உணர்த்துகின்ற முக்கியம் உண்மைகள் அவ்வப்போது மறக்கப்படுகின்றது. “எம் குடும்பத்தின் தலைவர் இயேசு” என்ற விசுவாசம் உண்மைதான் பறைசாற்றப்படுகின்றது அப்படியெனில், அவரது ஒவ்வொரு குடும்பமும் சிறிது நேரமாவது உரையாட வேண்டும், உறவாட வேண்டும். இதனைத்தான் குடும்ப செபம் குடும்பங்களை என்கிறோம்இணைக்கின்றது.

இயேசுவின் அன்பையும் இரக்கத்தையும் பராமரிப்பையும் உணர்த்துகின்றன கிறிஸ்தவ வாழ்வை புதுப்பிக்கின்றன குடும்ப வாழ்விற்கு மாபெரும் சக்தியாக விளங்குகின்றது. எனவே ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் தங்களது குடும்ப அட்டவணையில் குடும்பச் செபத்திற்கான நேரத்தை ஒதுக்கவேண்டும்.

#முதியோர்களை கண்காணிப்போம்

இன்று முதியோர் இல்லங்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது ஏனெனில், பல குடும்பங்கள் முதியோர்களுக்காக நேரம் செலவு செய்வது, அவர்களை கவனிப்பது இயலவில்லை என்ற காரணத்தைக் காட்டி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள். முதிய வயதில் விரும்பிச் செல்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

  • அவர்களைச் சுமையாகக் கருதாது, வழிகாட்டிகளாகக் கருதுவோம்.
  • அவர்களை ஆலோசகர்களாக கொள்ளவேண்டும்.
  • அவர்களின் குறைபாடுகளை ஏற்று, குழந்தைகளாக எண்ணி அரவணைப்போம்.
  • பொருத்தமான உணவுகளைக் குறிப்பிட்ட நேரத்திற்கு வழங்குவோம்.
  • நன்கு ஓய்வெடுக்கும் சூழலை உருவாக்குவோம்.
  • இன்றைய முதியோர்கள், நேற்றைய பெற்றோர்கள். இன்றைய பெற்றோர்கள், நாளைய முதியோர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

#குடும்பக் கையேடு

இந்த பங்கின் உறுப்பினர்கள் நீங்கள் என்று வெளிப்படையாகக் காட்டவே இக்கையேடு. இதில் உங்கள் பெயர்கள், மற்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இப்பங்கின் உறுப்பினர்களாக இருப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடையவேண்டும். உயிருள்ள ஊக்கமும், ஈடுபாடும் கொண்ட உறுப்பினர்களாக, நடைமுறையில் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ்ந்து காட்டவேண்டும். சில கடமைகளும் உங்களுக்கு உண்டு அதன்படி வாழ்வீர்களாக.

  • பங்குத் தந்தையை தங்கள் தேவைக்காக அணுகும்போது பங்கு அட்டை எடுத்து வருவது கட்டாயம். பங்கு எல்லைக்குள் வாழ்பவர்களுக்கே பங்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.
  • திருமணமான ஒவ்வொரு நபரும் தனி குடும்ப உறுப்பினர் அட்டை பெற வேண்டும்.
  • குடும்பக் கையேட்டின் பயன்பாடு: இறைமக்கள் தங்கள் குடும்பத்தில் நிகழும் திருமுழுக்கு (ஞானஸ்நானம்), முதல் திருவிருந்து உறுதிப்பூசுதல் திருமணம் நோயில்பூசுதல், நல்லடக்கம் போன்றவைகளுக்காகவும் பிற தேவைகளுக்காகவும் பங்குத்தந்தையை அணுகும்போது தவறாமல் இக்குடும்பப் பதிவேட்டினை எடுத்து வரவேண்டும். தவறினால் தேவைகள் நிறைவேற்றப்பட முடியாமல் போகலாம்.

#மாத சந்தா மனமுவந்து தருவோம்

பங்கின் ஆலய பராமரிப்பு, ஆலய ஊழியர்களுக்கு ஊதியம் திருவழிப்பாட்டிற்கான திருப்பண்டங்கள் வாங்குதல் பங்குத் திருவிழாவைச் சிறப்பாக கொண்டாடுதல், ஏழைகளுக்கு தர்மம் செய்தல், மறைக்கல்வி, திருவழிபாடு சம்பந்தமான கூட்டங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்துதல், பங்கின் முன்னேற்றப் பணிகளை செய்தல் சமூகப்பணிகள், மறைப்பணிகள் இன்னும் பிற அன்பு பணிகள் செய்தல் இவற்றிற்கு உதவுவதே மாத சந்தா.

#பங்குத் தந்தையோடுள்ள உறவை குடும்ப வளர்ச்சிக்குக் கருவியாகக் கொள்வோம்

பங்குத் திருஅவையின் தலைவராக விளங்குபவர் பங்குத் தந்தை, அப்பங்கு தந்தையோடுள்ள உறவு அப்பங்கில் வாழும் குடும்பத்திற்குத் தேவையானது. பல்வேறு பங்குத் தந்தையர்களைச் சந்திக்கும் பேறு பங்கு மக்களுக்கு உண்டு. ஒவ்வொரு குறிப்பிட்டக் காலத்திலும் குறிக்கப்பட்ட பங்குத் தந்தையர் தத்தம் பணிச்சூழலுக்கேற்ப அமைந்து வாழ்ந்துவருகின்றார்கள். இதை ஆயர் விருப்பமாகவும், ஆண்டவர் சித்தமாகவும் பார்க்க வேண்டும்.

  • ஒவ்வொரு குடும்பமும் பங்கின் வளர்ச்சிக்காக, நலனுக்காக தேவையான அடிப்படை உறவுகளை காக்க வேண்டும்.
  • பங்குத் தந்தையிடம் மறவாமல் தங்களது உணர்வுகளை கருத்துகளை நேரடியாக வெளிப்படுத்தவேண்டும.
  • பங்கின் பொதுநலத்திட்டங்களில் மாறுபட்ட கருத்துகள். இருப்பின் அதற்குரிய இடத்தில் பகிர்ந்துகொள்வோம். ஆனால பங்கின் வளர்ச்சிக்கு இடையூறாகச் செயல்படக் கூடாது.
  • பங்குத் தந்தையோடுள்ள உறவை வளர்க்க வேண்டும். பங்குப் பணிகள் தொடர்பான உறவை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.