ஜெபமாலை
சிலுவை அடையாளம்
தந்தை / மகன் / தூய ஆவியரின் பெயராலே. ஆமென்.
நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன்.
அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.
இவர் தூய ஆவியாரால் / கருவுற்று / தூய கன்னி மரியாவிடம் இருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் / பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து / அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் / இறந்தோர் இடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடமிருந்து வாழ்வோருக்கும் / இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.
தூய ஆவியாரை நம்புகிறேன்.
தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் நம்புகிறேன்.
புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
நிலைவாழ்வை நம்புகிறேன். ஆமென்.
இயேசு கற்றுத்தந்த இறை வேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே / உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக / உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல / மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை / இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை / நாங்கள் மன்னிப்பது போல / எங்கள் குற்றங்களை மன்னியும் / எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் / தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
மங்கள வார்த்தை மன்றாட்டு
அருள் மிகப்பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே / பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே / உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் / ஆசி பெற்றவரே.
தூய மரியே / இறைவனின் தாயே / பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
மூவொரு இறைவன் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் / மாட்சிமை உண்டாகுக / தொடக்கத்தில் இருந்தது போல் / இப்பொழுதும் எப்பொழுதும் / என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
ஓ! என் இயேசுவே (பாத்திமா மன்றாட்டு)
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும் / எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும் / உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ / அவர்களுக்கும் சிறப்பான உதவி புரியும். ஆமென்.
மறையுண்மைகள் (Mysteries of the Rosary)
இன்றைய நாளுக்கான மறையுண்மை தானாகவே திறக்கப்பட்டுள்ளது. மற்ற மறையுண்மைகளைக் கிளிக் செய்து விரித்துக் கொள்ளலாம்.
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள் (திங்கள், சனி) இன்றைய மறையுண்மை
- 1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னது குறித்து தியானிப்போமாக. மற்றும் தாழ்ச்சி என்னும் வரம் கேட்போமாக.
- 2. அன்னை மரியாள் எலிசபெத் அம்மாளை சந்தித்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் பிறர் அன்பில் வளர வரம் கேட்போமாக.
- 3. இயேசு பிறந்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் எளிமையை விரும்பி, ஏழைகளுக்கு உதவி செய்ய வரம் கேட்போமாக.
- 4. இயேசு பாலனை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் இறை திருவுளத்திற்குப் பணிந்து வாழும் வரம் கேட்போமாக.
- 5. காணாமற்போன இயேசுவைக் கண்டடைந்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் நாள்தோறும் இறைவனைச் சார்ந்து வாழ வரம் கேட்போமாக.
ஒளியின் மறையுண்மைகள் (வியாழன்) இன்றைய மறையுண்மை
- 1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது குறித்து தியானிப்போமாக. மற்றும் நாம் பாவத்திற்கு மனம் வருந்தி புது மனிதனாக நாள்தோறும் வாழ வரம் வேண்டுவோமாக.
- 2. இயேசு கானாவூர் திருமணத்தில் முதல் புதுமை செய்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் நம் மனதில் எழும் எண்ணங்களை இறைவன் ஆசீர்வதிக்க வரம் வேண்டுவோமாக.
- 3. இயேசு விண்ணரசை அறிவித்து மனந்திரும்ப அழைத்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் நற்செய்தி அறிவிப்பவர்களை இறைவன் வழிநடத்தும்படி வேண்டுவோமாக.
- 4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் ஆனது குறித்து தியானிப்போமாக. மற்றும் நாம் இறையன்பையும், இயேசுவின் மாட்சிமையையும் வெளிப்படுத்தும் அடையாளங்களாக வாழ வரம் வேண்டுவோமாக.
- 5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது குறித்து தியானிப்போமாக. மற்றும் இயேசுவைப் போல் மற்றவர்களுக்குக் கையளித்து வாழ வரம் வேண்டுவோமாக.
துயரம் நிறை மறையுண்மைகள் (செவ்வாய், வெள்ளி) இன்றைய மறையுண்மை
- 1. இயேசு இரத்த வியர்வை வியர்த்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் நாள்தோறும் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போமாக.
- 2. இயேசுவைக் கற்றூணில் கட்டியடித்தது குறித்து தியானிப்போமாக. மற்றும் நமது உடல் உறுப்புக்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக.
- 3. இயேசுவுக்கு முள்முடி சூட்டியது குறித்து தியானிப்போமாக. மற்றும் வாழ்க்கையில் வரும் இன்னல்களை ஏற்று வாழ வரம் கேட்போமாக.
- 4. இயேசு சிலுவை சுமந்து சென்றது குறித்து தியானிப்போமாக. மற்றும் வாழ்க்கைச் சுமைகளைப் பொறுமையுடன் ஏற்று வாழ வரம் கேட்போமாக.
- 5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டது குறித்து தியானிப்போமாக. மற்றும் இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக.
மகிமை நிறை மறையுண்மைகள் (புதன், ஞாயிறு) இன்றைய மறையுண்மை
- 1. இயேசு உயிர்த்து எழுந்தது குறித்து தியானிப்போமாக. நமது நம்பிக்கை என்றும் வளம் காண வரம் வேண்டுவோமாக.
- 2. இயேசு விண்ணகம் சென்றது குறித்து தியானிப்போமாக. வாழ்வை தேடும் வரம் வேண்டுவோமாக.
- 3. தூய ஆவி இறங்கி வந்தது குறித்து தியானிப்போமாக. நாம் அனைவரும் ஆவியானவரைப் பெற்றுக்கொண்டு இவ் உலகில் ஒளியாய் விளங்க அருள் வேண்டுவோமாக.
- 4. மரியன்னையின் விண்ணேற்பு குறித்து தியானிப்போமாக. அறியாமையும் பயமும் நீங்கி இறை வார்த்தைக்கேற்ப வாழ்க்கை வாழ வரம் வேண்டுவோமாக.
- 5. இறையன்னை விண்ணக, மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டது குறித்து தியானிப்போமாக. நாம் நம் அன்னையின் மீது ஆழமான நம்பிக்கையும், பக்தியும் கொண்டு வாழ வரம் வேண்டுவோமாக.
முடிவு ஜெபம்
அதிதூதரான புனித மைக்கேல் / தேவதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே, / திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே / நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த 53 மணி ஜெபத்தையும், / உங்கள் புகழ்ச்சிகளோடு ஒன்றாகக் கூட்டி / புனித இறையன்னையின் பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே!
மிகவும் இரக்கமுள்ள தாயே! / உமது அடைக்கலமாக ஓடிவந்து, / உம்முடைய உபகார சகாயங்களை இரந்து மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும், / உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். / கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, / தயையுள்ள தாயே! / இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, / உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். / பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள், / உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு / உமது சமூகத்திலே நிற்கின்றோம். / அவதரித்த வார்த்தையின் தாயே, / எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் / தயாபரியாய் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
தூய மரியாவின் மன்றாட்டு மாலை
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும்.
விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய்மை நிறை மூவொரு இறைவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே (மும்முறை)
இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முதல்: இறைவனின் தூய அன்னையே! இதோ உன்னை சரணடைந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மகிமை நிறைந்த கன்னியே, விண்ணகப் பேறு பெற்ற அரசியே, அனைத்து துன்பங்களிலிருந்தும் எங்களை என்றும் காத்தருளும்.
முதல்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி.
எல்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக!
இறைவா! முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருளும். எப்பொழுதும் கன்னியான தூய மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிருந்தும் எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
திருத்தம் மற்றும் அனுமதி : மேதகு தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ்