

புனித வின்சென்ட் தே பால் சபை
வின்சென்ட் தே பால் சபை என்பது ஒரு சர்வதேச கிறிஸ்தவ தன்னார்வ அமைப்பாகும், இது சித்தாந்தம், நம்பிக்கை, இனம், வயது அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தேவைப்படுபவர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்குவதன் மூலம் வறுமை மற்றும் தீமைகளைச் சமாளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இந்தா SSVP சபை. ஏழை மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவி, வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை வழங்கும் உலகளாவிய கத்தோலிக்க தொண்டு நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது SSVP இலக்காகும்
வின்சென்ட் தே பால் சபை 1833 ஆம் ஆண்டில் பிரான்சின் பாரிஸின் சேரிகளில் வாழும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டது. சபையின் நிறுவனர் ஃபிரடெரிக் ஓசனம் (Frederic Ozanam), ஒரு பிரெஞ்சு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர் ஆவார். சமுதாயத்தை நிறுவியபோது அவருக்கு 20 வயதுதான்.
##இந்தியாவில் வின்சென்ட் தே பால் சபை
1852-53 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மிஷனரிகளால் இந்த சங்கம் முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1863 ஆம் ஆண்டில் பம்பாயில் சில மாநாடுகள் தொகுக்கப்பட்டு பம்பாய் குறிப்பிட்ட கவுன்சில் நிறுவப்பட்டபோது இந்த சங்கம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் சபை தொடர்ந்து வளர்ந்து வந்தது.
##கிருஷ்ணகிரி வின்சென்ட் தே பால் சபை
எமது கிளைச்சபையானது 14.11.1982 -ல் கிருஷ்ணகிரி பங்கு தந்தையாக இருந்து மறைந்த அருட்தந்தை எம்.ஞானபிரகாசம் அடிகளாரின் முயற்சியாலும், ஒத்துழைப்பாலும தோற்றுவிக்கப்பட்டது. தற்பொழுது சகோ. எஸ். ஜெயபால் தலைவராக செயல்படுகிறார். இச்சபையின் வளர்ச்சிக்காகவும் ஏழை எளியோரின் உடல் ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் பணிபுரிந்து வந்தனா என்பதை மகிழ்வுடன்தெரிவித்துக்கொள்கிறோம். இக்கிளைச் சபை துவங்கி சந்து ஆண்டுகளுக்கு பிறகு 18.06.1987 - இங்கிலாந்து - வேல்ஸ் சபையுடன் இணைக்கப்பட்டது அதன் பின்னர் 29.06 1987 -ல் பாரிசில் உள்ள உலக கவுன்சில் ஜெனரலின் அங்கீகாரத்தையும் பெற்றது.
< ! within quets>
##நோக்கம்
இங்கினைச்சபையின் நோக்கம் ஏழை எவயோர்களுக்கு சாதி மத இன மொழி வேறுபாடின்றி உடல் ஆன்ம ஈடேற்றத்திற்காக சேவைபுரிவாதாகும். < ! within quots>
##செய்து வரும் பணிகள்
1. மேற்கண்ட நோக்கத்தை மையமாக கொண்டு 4 ஏழை குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு உணவு உடை மருத்துவ உதவி போன்றவற்றை அளித்து வருகிறோம்
2. ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எனிய மாணவ, மாணவியருக்கு பள்ளிச் சீருடைகள். பள்ளிக் கட்டணங்கள் போன்றவற்றை அளித்து வருகிறோம்.
3. கிறிஸ்துமஸ் திருவிழாவின் போது ஏழைகளுக்கு புத்தாடைகளும் சிறப்பு உணவும் அவரித்து வருகிறோம்.
4. மேல் சபையின் உதவியுடன் ரூ. 50,000/- மதிப்பீட்டில் புனித வின்சென்ட் தே பால சபை தையற் பயிற்சி மையம் என்ற திட்டத்தை முன்னாள் பங்குத்தந்தை எம். ஜெகராஜ் அடிகளாரின் ஒத்துழைப்பினால் தோற்றுவிக்கப்பட்டு தற்பொழுதும் தொடர்ந்து செயல்படுகிறது.
5. முன்னாள் பங்கு தந்தை எம். ஜெகராஜ் அடிகளாரின் ஆலோசனையின் பேரிலும், ஒத்துழைப்பின் பேரிலும் அன்னை பாத்திமா திருமணத் தகவல் மையம் மற்றும் திருப்பொருள் விற்பனை மையம் மற்றும் தையல் பயிற்சி மையமும் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து நமது பாக இறை மக்களுக்கும் பிற இன மக்களுக்கும் பயன் படும் வளையல் நிர்வகித்து வருகின்றோம்.
6. சபையை தோற்றுவித்த அருட் தந்தை ஞானப்ரகசம் நினைவு நிதி ஒன்றை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஏழைகளுக்கு இலவம் சவப்பெட்டி செய்து கொடுத்து வருகிறோம்.
7. சபையால் பங்கு மக்களுக்கு உதவும் பொருட்டு முன்னான பொருளா சகோதார் A.புஷ்பரால் அவர்களால் பங்குதந்தை மதலைமத்து அடிகள் வேண்டுகோக்கு இணங்க பாங்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
8. ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் பங்கு மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொழுக்கின்றோம்.
9. கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டா போன்ற விழாக் காலங்களில் தத்துக்குடும்பங்களுக்கு புத்தாடைாள். சிறப்பு உணவுகள் வழங்கி வருகிறோம்.
10 ஞாயிறு தோறும் ஏழைகளுக்கு காலை திருப்பலி முடிந்தவுடன் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
உறுப்பினர்கள்
சகோ. M. ஞானபிரகாசம் (தலைவர்)
சகோ. S. டேவிட் மரியநாதன் (வட்டார தலைவர்)
சகோ. L. மரிய இருதயநாதன் (து.தலைவர்)
சகோ. R. மரியதாஸ் (செயலர்)
சகோ. S. ஆபிரகாம் (பொருளாளர்)
சகோ. S. ஜெயபால்
சகோ. C. சூசைராஜ்
சகோ. A. ஜான் கென்னடி
சகோ. S. போனிபாஸ்
பெண்கள் சபை
[insert org-vdp-women.jpg image here]
தோற்றம் : முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி எம். ஜெகராஜ் அடிகளார்.
துவங்கப்பட்ட ஆண்டு : 26-01-2003
தலைவி : சகோதரி குழந்தை தெரசா (6 ஆண்டுகள்)
செயலாளர் : சகோதரி லூர்துமேரி (6ஆண்டுகள்)
தற்போது சகோதரி ஜோஸ்பின் மேரி அவர்கள் தலைவராகவும், மற்றுமுள்ள உறுப்பினர்களும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இச்சபையில் உள்ள பெண்கள் ஆற்றி வரும் பணிகள்:
ஜூபி லோன் என்ற திருப்பி செலுத்தும் திட்டத்தின் மூலம் ரூபாய் ஐந்தாயிரம் பெற்று தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்கின்றனர்.
பள்ளி துவக்கத்தில் ஏழை மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பள்ளி சீருடை போன்றவைகளையும் வழங்கி வருகின்றனர்.
தையல் மிஷின் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 60000, மதிப்பில் 11 தையல் மிஷின்கள் வழங்கி முன்னேற்றத்திற்கு பெண்களின் உதவி வருகின்றனர். குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை பங்கு தந்தையின் ஆலோசனையோடு தீர்த்து வருகின்றனர். சிறைச்சாலைகளில் உள்ளவர்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் பங்குத் தந்தையின் உதவியுடன் மூன்று
சந்தித்து சபையினரும் சேர்ந்து அவர்களை இனிப்புகள் வழங்கி, கிறிஸ்துமஸ் செய்தியை அளித்து ஜெபித்து விட்டு வருகின்றனர்.
##ஆன்மீகப் பணி
திவ்யநற்கருணை ஆராதனை, கிறிஸ்து அரசர் திருநாள் ஆராதனை போன்ற வழிப்பாட்டில் வின்செந்தியர்கள் ஈடுபாடு கொண்டு வழிநடத்தி வருகின்றனர் .
தவக்காலத்தில் ஒப்புரவு அருட்சாதனம் சிறப்பாக பெற அதற்க்காக கைபிரதிகள் தயாரித்து பங்கு மக்களுக்கு அளித்து ஒப்புரவு அருட்சாதனம் விழிப்புணர்ச்சி அளிக்கப்படுகிறது.
##நிதி ஆதாரம்
கிருஷ்ணகிரி பங்கில் ஏழைகளுக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டோர் பலர் இருக்கின்றனர். அவர்கள் மாதந்தோறும் அளிக்கும் நன்கொடைகள் மேல்சபை அளிக்கும் தொழிற்கல்வி உதவித்தொகை மற்றும் வின்செந்தியர்கள் வாரக்கூட்டங்களில் அளிக்கும் இரகசிய காணிக்கை, திருப்பொருள்கள் விற்பணை மையத்திலிருந்தும் திருமண தகவல் மைய நிதியிலிருந்தும் தையற்பயிற்சி மையத்திலிருந்தும் கிடைக்கும் நிதி ஆதாரங்களைக் கொண்டு பிறரன்பு பணிகளை இச்சபை செய்து வருகிறது.