English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
R.C. பாத்திமா உயர்நிலைப்பள்ளி

R.C. பாத்திமா உயர்நிலைப்பள்ளி

அள்ள அள்ள குறையாத

அட்சய பாத்திரம் தான் கல்வி!

அறிவு என்னும் பெட்டகத்தை

திறக்க உதவும் ஒரே சாவிதான் கல்வி!

அறியாமையை அகற்றி

அறிவை புகட்டும்

அற்புத விளக்குதான் கல்வி!

கிருஷ்ணகிரி நகரத்து இளம் சிறார்களுக்கு அறிவு, ஒழுக்கம், பண்பு சார்ந்த கல்வியை நல்க 1955 ஆம் ஆண்டு தூய பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்தந்தை குழந்தைசாமி அடிகளாரின் பெருமுயற்சியில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள் கொண்ட நடுநிலைப்பள்ளியாக மாணவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்டது. பின்னர் 1967 ஆம் ஆண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடுநிலைப்பள்ளியோடு இணைக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு வரை இப்பள்ளி சேலம் மறைமாவட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தது.

பின்பு 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தருமபுரி மறைமாவட்டம் உதயமானது. இம்மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்கள் இப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட இசைவு தந்தார். அன்றைய தாளாளர் அருள்தந்தை பி. சேவியர் அவர்கள் மற்றும் ஆயரின் வழிகாட்டுதல்படி இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்திட, கல்வித் துறையை அணுகி, அதற்கான ஆணையைப் பெற்றார். பின்பு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு தொடங்கப்பட்டது. மாணவர்களின் தேவைக்கேற்ப வகுப்பறைகள் கட்டப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

மேலும் தாளாளர் அருட்தந்தை எம். ஜெகராஜ் மற்றும் தாளாளர் அருட்தந்தை D. மதலைமுத்து தனது பணிக்காலத்தில் கல்வித்தரத்தை உயர்த்தி பொதுத்தேர்வுக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்து, பள்ளியானது 100 சதவீதம் விழுக்காடு பெற்றிடசெய்தனர். தாளாளர் அருட்தந்தை தேவசகாயம், தாளாளர் அருட்தந்தை சூசைராஜ் அவர்களும் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த பணியாற்றினர்.

தாளாளர் அருட்தந்தை இசையாஸ் அவர்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வேண்டிய வகுப்பறைகளையும், கட்டிக்கொடுத்து பள்ளியின் சூழ்நிலையை இனிமையாக்கி மாணவர்களின் - கற்றல் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு பணியாற்றி வருகிறார். தற்பொழுது இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் செயல்படுகிறது.

#ஆசிரியர் விபரம்:

எழுத்தறிவு போதிக்கும் கரங்களே....

நாட்டின் எதிர்கால அரண்கள் ........

ஆசிரியர்களே இறைவனின் வரங்கள்

பள்ளியில் தற்போது நிரந்தர பணியிடத்தில் ஒரு பட்டதாரி தலைமையாசிரியரும், ஒரு தமிழாசிரியை, 9 பட்டதாரி ஆசிரியர்களும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும், கைத்தொழில் ஆசிரியர் ஒருவரும் தொகுப்பூதியத்தில் 13 பட்டதாரி ஆசிரியர்களும், மூன்று தமிழாசிரியர்களும் மற்றும் ஒரு இளநிலை உதவியாளரும் பணியாற்றி வருகின்றனர்.

#கல்வித்தரம் :

இப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தொடங்கப்பட்டு 25 கல்வி ஆண்டுகளில் தொடர்ந்து 13 ஆண்டுகள் 100% தேர்ச்சியும், 7 முறை 98% தேர்ச்சியும், 4 முறை 99% தேர்ச்சியும் 1 முறை 97% தேர்ச்சியும் பெற்றுள்ளது.

#மாணவர்கள் விபரம்:

பூக்களாய் செடிகளாய்

பள்ளியின் பூந்தோட்டமாக

இருப்பது மாணவர்கள் மட்டுமே.

இப் பள்ளியின் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 865 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

#உடற்கல்வி :

ஆழியைப் போல் சக்திபெற

உடற்பயிற்சி செய்

உடல் முழுதும் வியர்க்கும் வரை

தினமும் செய்....!

கடந்த பல ஆண்டுகளாய் தடகளப் போட்டி, கோ கோ, தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

2019-ஆம் ஆண்டில் கோகோ வில் மாநிலத்தின் 3 - வது இடத்தையும், 5 வருடமாக மாநில அளவிலும்

#பொன் விழா ஆண்டு:

இளையோர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சர்த்தனர். கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

#செஞ்சிலுவை இயக்கம்:

ஒவ்வொரு புதன்கிழமையும் செஞ்சிலுவை இயக்கக்கூட்டம் ! நடைபெறுகிறது. இந்த இயக்கத்தின் நோக்கம் " என் கடன் பணிசெய்து கிடப்பதே ஆகும்". சுகாதாரம், சேவை, நட்பு இம்மூன்றினையும் சீரிய முறையில் பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொண்டு நல்ல ஆரோக்கியத்துடன் சேவை மனப்பான்மை, தொண்டுள்ளம் இவற்றைக் கற்று சமூக உணர்வு, தேசிய உணர்வு கொண்டவர்களாக இருக்க உதவுகிறது.

#சாரணர் இயக்கம் :

எம் பள்ளியில் சாரண இயக்க மாணவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் விருது பெற்று வருகின்றனர். இக்கல்வியாண்டிலும் 17 மாணவர்கள் தமிழக ஆளுநர் விருது பெற தகுதி பெற்றுள்ளனர்.

#பசுமைப் படை:

எம் பள்ளியில் 20 ஆண்டுகளாக தேசிய பசுமைப்படை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பசுமைப்படை மாணவர்கள் பள்ளியின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களாக உள்ளனர்.

மாணவர்களை மகிழ்விக்கவும், திறமைகளை வெளிக்கொணரவும் வேண்டி பள்ளியில் சுதந்திரதின விழா, குடியரசு தினவிழா, ஆசிரியர்கள் தினவிழா, குழந்தைகள் தினவிழா, தீபாவளி தின விழா, கிறிஸ்துமஸ் விழா, பொங்கல் தின விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா எனப் பல விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாக்களுக்காக நடத்தப்படும் பல போட்டிகளில் மாணவர்களும் பங்கேற்று பரிசைப்பெற்று வருகின்றனர். பரிசினைவிட அவர்களின் பங்கேற்பே பாராட்டுக்குரியது.

இரக்கத்தின், அன்னையாகிய புனித பாத்திமா அன்னையே, இப்பள்ளி உருவான நாள் முதல் இன்றுவரை எம் பள்ளியை துணை நின்று வழிநடத்தி வருகிறார்.

  • இவண்,

தாளாளர், தலைமையாசிரியர்,

இருபால் ஆசிரிய பெருமக்கள்.