
சமுதாயக் கூடம்
#நெறிமுறைகள்
- ஒத்துழைப்போம், பயன்படுத்தி மகிழ்வோம் அன்னை பாத்திமா சமுதாயக் கூடம் உங்களைஅன்புடன் வரவேற்கிறது.
- அன்னை பாத்திமா சமுதாயக் கூடத்தின் அமைதியும், தூய்மையையும் பேணிக்காக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நீங்கள் தான், எனவே ஹால், உணவகம், அறைகள் மற்றும் கழிப்பறையை சுத்தமாக வைக்கவும்.
- மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனமாய் இருப்பதுடன், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஹால் மற்றும் உணவகத்திலிருந்து வெளியே வருமுன் மின்விசிறி, மின்விளக்குகளை அனைத்துவிட்டு வரவும்.
- தண்ணீர் குழாயைப் பயன்படுத்திய பிறகு, தண்ணீர் வராத சமயத்தில் குழாயை மூடிவிட்டு செல்லவும்.
- சமுதாயக் கூடத்திலுள்ள நாற்காலி சமையல் பொருட்கள் இதரப் பொருட்களின் பயன்பாட்டிற்குப் பிறகு உரிய இடத்தில் திருப்பி வைக்கவும்.
- உங்கள் உடனடித் தேவைக்கு வரவேற்பகத்தை அனுகவும். இல்லையேல் சமுதாயக் கூடப் பணியாளரை அனுகவும்.
- திருஅவையின் அனைத்து நிகழ்வுகள் (அருள்சாதன விழாக்கள், ஜூபிலி விழாக்கள், குடும்ப விழாக்கள், திருஅவையின் கூட்டங்கள், திருஅவையின் பயிற்சிகள்) இவைகளுக்கு உரிய பணம் செலுத்தி சமுதாயக் கூடத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
- அரசியல் கூட்டங்கள், கட்சிக்கூட்டங்கள் மற்றும் மக்களின் நம்பிக்கை வாழ்வைப் பலவீனப்படுத்தக்கூடிய நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை.
- சமுதாயக் கூடத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு பங்கு இறைமக்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்படும் முன்பணம் செலுத்தி, நாள்களை குறித்து வைக்கவும். நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் முழுப்பணமும், பிற செலவினங்களையும் செலுத்த வேண்டும்
- சமுதாயக் கூடக் கட்டிடம் கட்ட நன்கொடை ரூ. 10000 கொடுத்த குடும்பத்தினர், குடும்ப நிகழ்ச்சி நடக்கும்போது இரசீது காண்பித்து கட்டணக் குறைப்பைச் செய்து கொள்ளலாம்
- கடைசி நேரத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்வதை தவிர்க்க வேண்டும்.
- சமுதாயக் கூடம் பயன்படுத்துபவர் பொதுநலம் கருதி, பொறுப்புடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.