English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
நோயில்பூசுதல்(அவஸ்தைப்பூசுதல்)

நோயில்பூசுதல்(அவஸ்தைப்பூசுதல்)

#புரிந்துகொள்வோம்

நலம் தரும் மருத்துவராகிய கிறிஸ்துவைச் சந்திக்க வைத்து, நம் பாவங்களையும் அவற்றிற்கு உரிய தண்டனைகளையும் போக்கி நம்மை விண்ணக வாழ்விற்குத் தயாரிக்கிற அருளடையாளமே நோயில்பூசுதல் ஆகும்.

மரணப்படுக்கையில் இருப்போருக்கு மட்டுமின்றி, கடின உடல் நலமின்றி இரு ப்பவர்களுக்கும் இறையருள் பெற்று உடலுக்கும் ஆன்மாவிற்கும் ஆறுதலையும் திடனையும் தரக்கூடய அருளடையாளம்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் கடும் வியாதியில் இருப்பவர்களுக்கும் சாகும் வேலையில் இருப்போருக்கும் ஆறுதலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நோயில்பூசுதல் அருள் அடையாளத்தை வழங்கச் சொல்லி குருவிடம் கூறுவதும் நமது கடமை ஆகும்.

#தயாரிப்போம்

  • குடும்பத்தார் தகுதியுடையோரை அடையாளம் கண்டு தயாரிக்கவேண்டும்.
  • பங்குப் பணியாளரிடம் தகுந்த நேரத்தில் தெரிவிப்பதோடு மட்டுமன்றி நோயில்பூசுதல் வழங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதம் முதல் வெள்ளி அன்று நற்கருணை பெற வழி செய்யவேண்டும்.
  • குடும்ப செபத்தின் வழியாக நோயாளிக்கு நம்பிக்கையை வளர்க்கவேண்டும்.
  • நோயாளிகளுக்கு குடும்பத்தாருடைய அன்பும், அரவணைப்பும், அக்கறையும்தான் சிறந்த சிகிச்சையாக இருக்கமுடியும்.
  • நோயாளிகளைப் புரிந்துக்கொள்வோம், அவர்களது வேதனைகளில் பங்கெடுப்போம்
  • அவர்களுக்குத் வேண்டிய நேரத்தைச் செலவிடுவோம்.
  • குறிப்பிட்ட நேரங்களில் உணவு சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கி, ஆரோக்கியமான உணவை வழங்குவோம்.
  • உளவியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் நிறைவு செய்வோம்.