English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
கல்லறை

கல்லறை

கல்லறைத் தொடர்பு விவரங்கள்

கல்லறை பராமரிப்பாளர்: தர்மன்

கத்தோலிக்க திருஅவையின் கல்லறை நெறிமுறைகள்

#இறப்பு மற்றும் நல்லடக்கம்

  • ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது (திபா 116:15). குடும்ப நபர் இறந்தவுடன் பங்குத்தந்தை அனுமதியின் பேரில் ஆலய மணி அடித்து முறைப்படி அடக்கச் சடங்கிற்கு ஏற்பாடு செய்து, இறந்தோர் திருப்பலி (அ) நல்ல அடக்கச் சடங்குடன் உடலைப் பக்தியுடன் அடக்கம் செய்தல் வேண்டும்.

-திருமுழுக்குப் பெற்று, பங்கின் குடும்ப உறுப்பினர் அட்டையில் பதிவுச் செய்யப்பட்டோருக்கு மட்டுமே கிறிஸ்தவ நல் அடக்கமும், கல்லறை வாய்ப்பும் தரப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-அடக்கப்பணி மற்றும் அடக்கச் சடங்குகளின்போது கிறிஸ்தவப் பண்பாட்டிற்கேற்ப, செப் சூழமையில் கண்ணியமாக நடந்துக்கொள்ளவும். மூடநம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு நல்லடக்கத் திருப்பலியும் கல்லறை அனுமதியும் தரப்பட, அவர் திருமுழுக்குப் பெற்றவராக, பங்கு உறுப்பினர் கையேட்டில் பதிவு செய்யப்பட்டவராக இருத்தல் அவசியம். அவரின் உடற்கூறு மருத்துவ சோதனைக்குப்பின் காவல் துறை குறிப்புக் கொண்ட அறிக்கை நகல் கொண்டதாயும் இருக்க வேண்டும்.

-இறந்தவர்களின் நினைவு நாளில் கல்லறைக்கு செபிக்க செல்வோர், கல்லறைக் காவலரிடம் அல்லது பங்குத்தந்தை 'அலுவலகத்தில் கல்லறையின் சாவியைப் பெற்றுச் செல்லவேண்டும். நினைவுச் சடங்கு முடிந்தவுடன் சாவியை ஒப்படைக்க வேண்டும்

#கல்லறை நினைவுச் சின்னம் மற்றும் கல்லறைப் புதுப்பித்தல்

  • கல்லறை நினைவுச் சின்னம், கல்வெட்டு, கல்லறைப் புதுப்பித்தல் போன்றவைக்கு பங்குத் தந்தை மற்றும் கல்லறைப் பராமரிப்புக் குழுவின் ஒப்புதலும் அனுமதியும் பெற வேண்டும்.
  • கல்லறை நினைவுச் சின்னம் கல்வெட்டு கல்லறைப் புதுப்பித்தலுக்கான முழுப் பணத்தை பங்கு அலுவலகத்தில் கட்டி இரசீது பெற்றுக் கொண்ட பிறகுதான் கல்லறைப் பணிகளைத் துவங்க வேண்டும். ஒருமாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
  • கல்லறை நினைவுச் சின்னம், கல்வெட்டு, இவைகள் கிறிஸ்தவப் பண்பாட்டிற்கேற்ப, திருஅவையின் மனப்பாங்கை வெளிப்படுத்துவதாக கல்லறைகள் இருக்க வேண்டும் கல்லறை நினைவுச் சின்னம், கல்லறைப் புதுப்பித்தல் அல்லது பிற.
  • கட்டமைப்புகளைச் செய்யும்போது அருகிலுள்ள கல்லறையின் மீது அல்லது இடங்களின் மீது தங்கள் பொருட்களை சிதறடிப்பது மற்றும் நீண்ட நாள்களுக்கு கட்டுமான பொருள்களை விட்டுச் செல்லக் கூடாது.
  • பங்குத் தந்தை, கல்லறைப் பராமரிப்புக் குழுவின் ஒப்புதல் பெற்ற ஒப்பந்ததாரர் மற்றும் மேஸ்திரி மட்டுமே கல்லறைப் பணிகள் செய்ய அனுமதி உண்டு.
  • கல்லறை நெறிமுறைகளுக்கு எதிராக வேலைகளைச் செய்தால் அந்தப் பணிகள் நிறுத்தப்படும்.
  • கல்லறை நினைவுச் சின்ன அமைப்பதற்கான திட்டவரைவு:

--*ஒரு கல்லறை:*

---நீளம் 8 அடி.

---அகலம் 3.5 அடி.

---உயரம் 1.5 அடி. கொண்டதாக இருக்க வேண்டும்.

-- குடும்பக் கல்லறை (இரண்டு கல்லறைகள்):

--- நீளம் 8 அடி,

--- அகலம் 6.5 அடி.

--- உயரம் 1.5 அடி, கொண்டதாக இருக்க வேண்டும்.

''இந்த அளவையில் மாற்றங்கள் செய்யக் கூடாது.''

  • கல்லறைப் பணிகள் முடிந்தவுடன் செங்கல், மணல் சிமென்ட் இதரப் பொருட்களை அகற்ற வேண்டும்.
  • கல்லறைகள் கட்டும்போது தவறாக சித்தரிப்பது, சுற்றிலும் வேலி அமைத்தல் பென்சிங் அமைத்தலுக்கு கல்லறையின் தூய்மையும் புனிதமும் பேணப்பட வேண்டும் அனுமதி இல்லை.