English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
FSM சபை (மருத்துவத்துறை)

FSM சபை (மருத்துவத்துறை)

நவம்பர் 29, 1934 அன்று எங்களது கன்னியர்கள் கிருஷ்ணகிரியின் மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். திருச்சபை உறுப்பினர்களுடன், திருச்சபை பாதிரியார் Rev. Fr. Harou M.E.P, சகோதரிகளை முழு மனதுடன் வரவேற்றார். இங்குள்ள குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் ஒன்று கூடி சகோதரிகளை கண்களில் பிரகாசத்துடன் வரவேற்றனர். மக்கள் தங்கள் இதயங்களில் ஏக்கத்துடன், தங்கள் அன்பையும் மரியாதையையும் தெரிவித்தனர்.

உள்ளூர் மக்களின் தேவைகளை உணர்ந்து, Mother St. Cesaire மற்றும் Sr. Antonie Marie ஆகியோர் 1935 ஆம் ஆண்டு குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் ஒரு சிறிய கட்டிடத்தில் St. Louis மருந்தகத்தை தொடங்கினர். ஆம், இவர்கள் கண்கள் அன்பின் மொழியைப் பேசுகின்றன, இவர்கள் அன்பின் கைகளை நீட்டினர். இவர்கள் அன்பின் கைகளால் தொட்டு குணப்படுத்தினார் , இவர்கள் கால்கள் தொலைதூர கிராமங்களுக்கு சென்று அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சையளிப்பது மற்றும் தொழுநோயாளிகளின் காயங்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் இவர்கள் பிரார்த்தனையின் மூலம் மக்களின் தேவைகளை குணப்படுத்தினார் . மேலும் பின்னர் வந்த Sr. Madeleine Paris, Sr. Marie Agnes மற்றும் Sr. Therese Marie ஆகியோர் கிராமங்களுக்கு கால்நடையாகவோ அல்லது சைக்கிளிலோ சென்று இந்த உன்னத பணியை மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்தனர்.

இன்று கிருஷ்ணகிரி என்றுஇந்த சிற்றூர் பின்னர் தமிழ்நாட்டின் மாவட்டத்தின் தலைநகரமாக உயர்நது தர்மபுரி மறைமாவட்டத்திற்கு சொந்தமானது. மேலும் இந்த சிறிய மருந்தகம் பின்னர் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக உயர்த்துள்ளது. இது பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் ஒரே மாதிரியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு, சமமாக மதிக்கப்படும் உள்ளூர் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். மருத்துவமனையில் 2 அறுவை சிகிச்சை அரங்குகள், நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, மருந்தகம், ஸ்கேன் வசதிகள் போன்றவை உள்ளன.

  • எங்களது சகோதரிகளுடன் 53 பணியாளர்கள், 5 மருத்துவர்கள் மற்றும் 6 ஆலோசகர்கள் இங்கு பணிபுரிகின்றனர். சமுதாயத்திற்கு சுகவாழ்வைக் கொண்டுவர முழு சமூகமும் ஒன்றிணைந்து எங்களது சகோதரிகளுடன் செயல்பட்டுவருகிறார்கள்.
  • மருத்துவமனைப் பணியைத் தவிர, N.G.Oக்களுடன் சேர்ந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் ஒரு நடமாடும் கிளினிக்கில் ஒவ்வொரு வாரமும் தொலைதூர கிராமங்களுக்குச் சென்று சேவைகளை செய்து செய்துவருகிறோம்.
  • நாங்கள் CHAD நடத்திவரும் D.S.S மருத்துவ முகாம்மில் இணைந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பங்கேற்று சேவை செய்துவருகிறோம்.
  • ஒவ்வொரு சனிக்கிழமையும் நாங்கள் பெண்கள் துணைச் சிறைக்குச் சென்று அவர்களுடன் உரையாடுதல் , சில தார்மீக மற்றும் சுகாதாரக் கல்வியை வழங்குதல் , மேலும் விளையாட்டுகளை நடத்தி வருகிறோம். இதனால் சிறைவாசிகளின் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது. விசேஷ சமயங்களில் பரிசுகள், உணவுகள் வழங்குதல் மற்றும் விளையாட்டுகளை நடத்தி பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
  • எங்கள் சகோதரிகள் மாணவர்களுக்கு மறைக்கல்வி கற்பித்தல், தேவாலயத்தில் பாடுதல், போன்ற திருச்சபை நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கிறோம். மேலும் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை 12 ஏழை மாணவர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் கல்வி கற்பிக்கிறோம்.