

பாடகர் குழு மற்றும் இசைப்பணி
திருப்பலியிலும் பிற திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் இறைமக்கள் பக்தியுடனும் முழுமையாகவும் பங்கேற்க பாடல்கள் மற்றும் இசை முக்கிய பங்கு வகிக்கின்றன. பாடகர் குழுவினர் செப உணர்வுடன் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, திருவழிபாட்டின் தன்மைக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பாடல்களைத் தயாரித்து வழிநடத்த வேண்டும்.
# தயாரிப்போம்
- திருப்பலி மற்றும் திருவழிபாட்டிற்கு ஏற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்து முன்கூட்டியே பயிற்சி செய்ய வேண்டும்.
- பாடல்கள் இறைமக்களை செபத்திலும் பக்தியிலும் பங்கேற்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.
- ஞாயிறு திருப்பலிகள் மற்றும் முக்கிய விழாக்களுக்கு முறையான இசைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
- பாடகர் குழுவினர் நேரத்திற்கு வந்து, ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
- குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாடகர் குழுவில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.
- திருவழிபாட்டின் ஒழுங்கையும் புனிதத் தன்மையையும் பேணும் வகையில் இசையைப் பயன்படுத்த வேண்டும்.
- பங்குத் தந்தை மற்றும் திருவழிபாட்டுக் குழுவின் வழிகாட்டுதலுடன் பாடகர் குழு செயல்பட வேண்டும்.