English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
R.C. பாத்திமா துவக்கப்பள்ளி

R.C. பாத்திமா துவக்கப்பள்ளி

பன்னியைக் கோயிலாக்கி,

பயில்வோரை தெய்வமாக்கி,

அறியாமை இருள் அகற்றி,

அறிவெனும் ஒளியேற்றி,

படைப்பாற்றலை துரிதப்படுத்தி,

படைத்திட்ட காவியங்களை

சாதனைகளாக்கிக் கொண்டிருக்கும் எம் R.C. பாத்திமா துவக்கப்பள்ளியின் வரலாறு இதோ.........

இப்பள்ளியானது 1955 ஆம் ஆண்டு 6 - 8 வகுப்பு கொண்ட நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. பின்னர் 1967-ஆம் ஆண்டு 1 - 5 வகுப்பு இணைக்கப்பட்டு 1 முதல் 8 முடிய உள்ள நடுநிலைப்பள்ளியாக நடைப் பெற்று வந்தது. 1.6.1998 முதல் உயர்நிலைப்பள்ளி உருவாக்கப்பட்டபோது 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட துவக்கப்பள்ளியாக இயங்கி வருகிறது.

இப்பள்ளியானது மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் லாரன்ஸ் பயஸ் DD அவர்களின் மேலான்மையாலும், அருட்பணி. ஜேம்ஸ் அவர்களின் மேற்பார்வையாலும், தாளாளராக அருட்பணி. இசையாஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இப்பள்ளியானது சீரும், சிறப்பாக இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 17 + 1 என்றஅடிப்படையில் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்களிடம் உள்ள திறமையை வெளிக் கொணர்வது ஆசிரியர்களின் கடமை என்பதை உணர்ந்து பணியாற்றியதால் இப்பள்ளியின் தரம் உயர்ந்து வருகிறது.

தமிழக அரசின் ஆணையின்படி கொரோனோ காலக் கட்டத்திற்குப் பின் கற்றல் குறைபாட்டை நீக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி பெற்றோர்களின் நன் மதிப்பையும் பெற்று சிறப்பாக நடந்து வருகிறது.

ஆசிரியர்கள், பெற்றோர்களின் உறவு நிலை சிறப்பாக இருப்பதில் பெற்றோர்கள் தரும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளியின் வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்ல ஏதுவாக இருக்கிறது. மாணவர்களுக்கு கல்விக் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் நல்ல உடல், உள்ள நலனோடு இருக்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும், வலிமையான உள்ளத்தை பெறவும் உடற்பயிற்சி வகுப்புகள், வகுப்பு வாரியாக செயல்பட்டு வருகிறது

கல்விக் கூடம் என்பது பல கலைகளை வளர்த்துக்கொள்ளும் ஒரு கலைக்கூடம், இப்பள்ளியின் சமய விழாக்கள், சமூக விழாக்கள் கொண்டாடப்படுகிறது. விழாக்கள் கொண்டாடப்படுவதன் நோக்கத்தை மாணவர்கள் அறிந்து வருகின்றனர். பிற சமய மாணவர்களை மதிக்கவும், அவர்களுக்கு விழா வாழ்த்து தெரிவிக்கவும், கற்றுக் கொள்கின்றனர். சமூக விழாக்கள் மூலம் நாட்டுப்பற்று, பிறரன்பு, மனிதநேயம், பொது நலன், பாரம்பரியம் இவைகளை கற்றுக் கொள்கின்றனர்.

தொடக்கப்பள்ளி உருவான நாள் முதல் இந்நாள் வரை 56 ஆண்டுகளாக கல்விப்பணியை கிருஷ்ணகிரியில் ஆலமரம் போல் செழித்து தழைத்து வளர துணை நின்று வழி நடத்தி வருவது எம் பள்ளியின் பாதுகாவலியாக உள்ள தூய பாத்திமா அன்னையே என்பது எம் நம்பிக்கை.