
ஞாயிறு மறைக்கல்வி
#தெரிந்து கொள்வோம்
மறைக்கல்வி வகுப்பில்தான் முதன் முதலாக செபிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்கிறோம். விவிலியத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடியும். திரு அவைக் கட்டளைகளை நாம் இந்த வகுப்பில் அறிந்து கொள்ள முடியும். நம்பிக்கை வாழ்வு வாழ இந்த மறைக்கல்வி அவசியம். இறைவனைப் பற்றிய அறிவு குறைந்து வரும் இக்காலகட்டத்திலே இப்படிப்பட்ட பயிற்சி தேவை.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஞாயிறு 2ஆம் (8 Am) திருப்பலிக்கு வந்து, அவர்களை மறைக்கல்வி வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடி செபிக்கும் குடும்பம் கூடி வாழும் என்பது போல இரவு குடும்பச் செபத்தில் பிள்ளைகளை விவிலியம் வாசிக்க செபிக்கத் தூண்டுதல் வேண்டும். மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களைக் கேட்டு, அவர்களை உற்சாகப்படுத்துதல் அவசியம். மறைக்கல்வி போதிக்க ஆசிரியர்களை விட பெற்றோர்களுக்கு (ஆர்வம் உள்ளவர்கள்) அழைப்பு விடுப்பது நல்லது. இந்த ஏற்பாடு இவர்களுக்கு நம்பிக்கையில் வாழ உறுதுணையாக இருக்கும்.
#பெற்றோர் கவனத்தில் கொள்வோம்
- நம் பிள்ளைகளுக்கு ஞாயிறு மறைக்கல்வி என்பது உங்கள் விருப்பத்தெரிவு அல்ல (It is not a choice). இது அவசியமான ஒன்று (It is very essential).
- ஆண்டுக்கு - குறைந்த பட்சம் 40 வகுப்புகள் வீதம் பங்கெடுக்கும் மாணவ-மாணவியருக்கு மட்டுமே அருள் அடையாளங்கள் கொடுக்கப்படும்.
- முதல் நற்கருணை பெற விரும்பும் மாணவ மாணவியர் 1-5 வகுப்புகள் பயிலும் போது ஆண்டுக்கு 30 வகுப்புகள் வீதம் குறைந்தது 140 வகுப்புகளாவது கலந்து கொள் வேண்டும் இப்படி 150 வகுப்புகளை முடித்த பிறகே முதல் நற்கருணைத் தயாரிப்பு வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.
- 8-ஆம் வகுப்பும் அதற்கு மேலும் படிக்கும் மாணவ மாணவியர் மட்டுமே உறுதிப்பூசுதல் பெறலாம். ஆனால் உறுதிப்பூசுதல் தயாரிப்பு வகுப்புகளை முடித்தபிறகு பங்கில் உறுதிப்பூசுதல் தரும்போது அனுமதிக்கப்படுவார்கள்.
- திருவருட்சாதனங்களை முறையாகப் பெற பிள்ளைகளைத் தயாரிப்போம். திருவருட்சாதனங்களை உரிய வயதில் ஏற்கச் செய்வோம். திருவருட்சாதனங்களைப் பெற பரிந்துரைகளைத் தவிர்ப்போம்.
#மாணவ மாணவியர் கவனத்தில் கொள்வோம்
- ஞாயிறு மறைக்கல்விக்கு வருகின்ற போது தவறாமல் கையேட்டினைக் கொண்டு வர வேண்டும்.
- மறைக்கல்வி வகுப்புகளை புறக்கணித்தோ விடுப்புகள் எடுத்தோ ஞாயிறு திருப்பலிக்கு வராமல் இருந்தோ திருவருட்சாதனங்களைப் பெறுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை மனதில் கொண்டு இவ்வகுப்புகளில் பங்கெடுக்க வேண்டும்.
- Tuition, Special Coaching Class, Hindi Class, Spoken English, Swimming Class, Dance Class, Music Class, Soft Skills Class மற்றும் வேறு பல வகுப்புகள் முக்கியமானவையே ஆனால் இவ்வகுப்புகளால் நமக்கு இறையறிவு கிடைத்து விடாது. எனவே ஞாயிறு மறைக்கல்வி என்பது உங்களுக்கு அவசியமான ஒன்று.
- ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கு நேரம் ஒதுக்குவதும் தவறாமல் கலந்து கொள்ளுவதும் நம் கடமையும் பொறுப்பும் ஆகும்.
- ஒழுங்கான வகுப்பிற்கு தவறாமல் வரும் பிள்ளைகள் ஆண்டு இறுதியில் பரிசுகளுடன் கௌளரவிக்கப்படுவார்கள்.
#இளையோரைப் புரிந்துக்கொள்வோம்
இளமைப் பருவம் முக்கியமான பருவம். இப்பருவத்தில் பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். இப்பருவத்தில் பிள்ளையின் உடல் அமைப்பிலும். சிந்திக்கும் திறனிலும், மற்றவர்களோடு பழகும் விதத்திலும் உடலிலும் மாற்றம் ஏற்படுகிறது. இப்பருவத்தில் பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்கவேண்டும் பெற்றோர் பிள்ளைகளைப் பகுத்தறிவாளர்களாக, மதிப்போடு நடத்தவேண்டும். பெற்றோர் கட்டளையிடுவதைப் பிள்ளைகள் விரும்புவதில்லை. தங்கள் தனித் தன்மையை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது இப்பருவத்தில் பெற்றோர் அவர்களோடு உரையாடல் நடத்த வேண்டும் அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் உடனிருப்பை உறுதிப்படுத்தவேண்டும்.
- இளையோர் மறைக்கல்வி பங்கில் கட்டாயமாக்கப்படுதல்வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் 2ஆம் ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் காலை 10.00 மணிக்கு இளையோர் கூட்டம் ஏற்பாடு செய்தல்.
- ஆன்மீகச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்த இளையோரை உருவாக்க வேண்டும்.
- இளையோர் பணிக்குழுவுடன் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தல்.
#கிறிஸ்தவக் கல்வியை வழங்குவோம்
பங்கிலுள்ள எல்லாக் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களும் தத்தம் திட்டப்படி, வசதிப்படி கல்வியில் பின்தங்கியக் கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு தனிக் கவனமும் தனிக் கல்வி ஊட்டமும் ஊக்கமும் திட்டமிட வேண்டும்.
இறையறிவைத் தருவதை மையமாக்கி கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் செயல்படவும், கல்விப் பணியைச் செய்யவும் வேண்டும்.
மறைக்கல்வி மற்ற எல்லாப் பாடங்களுக்கும் அடிப்படை என்பதையும், மற்ற எல்லாக் கல்விகளிலும் முதன்மையானது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.