English

பாத்திமா அன்னை திருத்தலம்

கிருஷ்ணகிரி - 635001, தமிழ்நாடு
Bishop
Parish Priest
Logo Our Lady of Fatima Shrine
English
புனித அன்னாள் நிதியுதவி தொடக்கப் பள்ளி

புனித அன்னாள் நிதியுதவி தொடக்கப் பள்ளி

பார்க்கும் திசையெங்கும் பசுமையாய், பார்ப்போரின் மனதுக்கு இனிமையாய், பல கலைகளின் சிகரமாய் திகழும் பள்ளி புனித அன்னாள் நிதியுதவி தொடக்கப்பள்ளி.

தங்கக் குடத்தில் குங்கும பொட்டு வைத்தது போல மாங்கனி நகராம் கிருஷ்ணகிரியில், 1937 ஆம் ஆண்டு 37 மாணவ - மாணவியரை கொண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளி 1951 ம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெற்று 1 முதல் 5 வகுப்புகளாக வளர்ந்து (2023) 1162 மாணவியரையும், 21 ஆசிரியைகளையும் கொண்டு அனைவரும், போற்றும் வண்ணம் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளி FSM சபை கன்னியர்களால் திக்கெட்டும் மணம் வீசும் ரோஜா மலரென துவங்கப்பட்டது. FSM சபை கன்னியர்களின் வழிகாட்டுதல்களால் அறியாமை இருட்டை, கல்வியின் துணையால் விரட்டி, ஞான சூரியனை ஒளிரச் செய்யும் சிறப்பான பள்ளியாக உள்ளது. கல்வியில் மட்டுமல்லாது பிறகலைகளிலும் சிறந்து விளங்கவும், தம்திறமைகளை வெளி கொணரவும், எம் பள்ளியில் கொண்டாடப்படும் பல விழாக்கள் வாய்ப்பளிக்கின்றன. சேவைக்கு வாசனை உண்டென்றும், தொண்டுக்கு உருவம் உண்டென்றும் எம் சபை கன்னியர்கள் நிருபித்து பல ஏழை மாணவியரின் கண்ணீரை கண்டறிந்து அதனை வற்றவைத்து மத்தாப்பு பூக்களை புன்னகையால் தோற்றுவிக்கிறார்கள்.

பாதை போட்டுக்கொண்டே, பயணம் செய்து... .

பயணம் செய்து கொண்டே, பாதை போட்டு...

பள்ளிய மேலும் மேலும் முன்னேற்றும் -ஆசிரியைகளும்,

மனமுவந்து தம் ஒத்துழைப்பை அளிக்கும்... பெற்றோர்களும் உள்ளவரை தமிழ் மொழி வாழும் காலம் வரை எம் பள்ளி சிறப்புடன் செயல்படும்.