
புதுநன்மை (நற்கருணை)
அப்ப இரச குணங்களுக்குள் இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திரு இரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கி இருக்கிற அருளடையாளமே நற்கருணை ஆகும்.
ஆண்டுக்கு குறைந்த பட்சம் 30 மறைக்கல்வி வகுப்புகள் வீதம் பங்கெடுக்கும் மாணவ-மாணவியருக்கு மட்டுமே அருள் அடையாளங்கள் கொடுக்கப்பட வேண்டும். முதல் நற்கருணைக்கு 40 வகுப்புகள் தொடர் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 5ஆம் வகுப்பும் அதற்கு மேல் படிக்கும் மாணவ-மாணவியருக்கு நற்கருணை அருள் அடையாளம் கொடுக்கப்படும்.
#தயாரிப்போம்
- நாம் ஒவ்வொருவரும் பாவம், தவறு செய்கின்றவர்கள்.
- நம்மைச் சுய ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
- பாவங்களை, தவறுகளை ஏற்றுக்கொள்வோம்.
- காரணங்களை ஆய்வு செய்வோம்.
- வருந்துவோம் மன்னிப்பு வேண்டுவோம்.
- தீர்மானங்களை எடுப்போம்.
- குருவிடம் அறிக்கையிடுவோம்.
- குருவின் அறிவுரைகளைக் கேட்போம்.


